பாதசாரி கடவையில் ஒருவர் பலி

Date:

களுத்துறை சிறிகுருச பாடசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) மாலை களுத்துறை சிறிகுருச பாடசாலைக்கு அருகில் உள்ள பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் மீது காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த அய்யப்புலி யேசுதாசன் என்ற 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முன்னாள் கடற்படை சிப்பாய் மற்றும் அவரது 17 வயது மகளும் காயமடைந்து களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....