உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி – கார்ல்சன் சாம்பியன்!

Date:

உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் ‘டிரா’ ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.

இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று துவங்கியது. இந்த சுற்றும் 25 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையைாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. அந்த வகையில் மேக்னஸ் கார்ல்சன் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....