36 வயதில் மரணமடைந்த WWE சாம்பியன்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

Date:

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரே வியாட் என்றே சொல்லலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலை குழந்தைகள் பார்த்தால் பயப்படுவார்கள். அண்டடெக்கர் போல இருட்டில் எண்ட்ரி கொடுப்பார்.

ப்ரே வியாட் WWE மல்யுத்த போட்டிகளில் 2009-ம் ஆண்டு அறிமுகமானார். இவர் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர் கூறியிருப்பதாவது:- புகழ்பெற்ற WWE வீரர் ப்ரே வியாட்டின் தந்தையிடம் இருந்து தற்போது ஒரு அழைப்பு வந்தது. எங்கள் WWE உறுப்பினர் ப்ரே வியாட் நெஞ்சுவலியால் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற சோக செய்தியை எங்களுக்கு அவர் தெரிவித்தார். அவரது குடும்பத்திற்காக நாங்கள் பிராத்தனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அவரது மறைவிற்கு WWE அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இரங்களை தெரிவித்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....