ஐரோப்பிய மதுப்பிரியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஐரோப்பிய கமிஷன் ஜூன் மாதத்திற்கான ஒரு தரவை வெளியிட்டது. இதன்படி வைன் அருந்தும் பழக்கம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது.
நாடுகள் வாரியாக, இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில் 10 சதவீதம், பிரான்ஸில் 15 சதவீதம், ஜெர்மனியில் 22 சதவீதம் மற்றும் போர்ச்சுகலில் 34 சதவீதம் என்று சரிவின் சதவீதம் உள்ளது. அதே சமயத்தில், உலகின் மிக பெரிய வைன் தயாரிப்பாளர்களான ஐரோப்பிய ஒன்றியத்தில் வைன் உற்பத்தி 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சில வருடங்களாகவே மக்களின் வாங்கும் சக்தி பொருளாதார காரணங்களால் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் தொழிற்சாலை சாராத வழியில் தயாரிக்கப்படும் பீர் மதுபானத்தை விரும்பி அருந்த தொடங்கியுள்ளனர்.




