பிக்பாஸ் 7-வது சீசனில் இப்படி ஒரு மாற்றமா…

Date:

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 50 லட்சம் ரூபாய் பணப் பரிசுடன் பிக் பாஸ் தமிழ் 6-வது சீசனை வென்றார் அசீம். அந்த சீசனில் விக்ரமன் மற்றும் ஷிவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசன் தொடங்கப்பட உள்ளது. அதற்கான ப்ரமோ வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த முறை யார் போட்டியாளர்களாக உள்ளே போகப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்ப வீடே ரெண்டாயிடுச்சு.. 🏠🏠 இன்னும் என்னென்ன ஆகுமோ.. 😀😎

 

இந்நிலையில், இந்த முறை 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான ப்ரமோவில் கமல் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். வழக்கமாக சண்டை போட்டு, பிக்பாஸ் வீடு இரண்டாகும். இந்த முறை வீடே இரண்டாகியிருப்பதால் சண்டையும் வேறுவிதமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....