வவுனியாவில் 8 வயது சிறுவன் துஸ்பிரயோகம் : 15 வயது சிறுவன் கைது

Date:

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று (27) மாலை 15 வயது சிறுவன் ஒருவன் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின், 8 வயது சிறுவன் வீடு சென்ற பின் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிசாரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....