தந்தையும் மகளும் தற்கொலை

Date:

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜஎல பிரதேசத்தில் நபரொருவர் தனது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

நேற்று (06) திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் தனது மகளுடன் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும், 6 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு அவர் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்து மனவேதனை அடைந்து தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....