இளம் பெண்ணின் மர்ம மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள்

Date:

கல்கிசையில் உயிரிழந்த தமிழ் யுவதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன .

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இலங்கை இளைஞனின் அழைப்பின் பேரில் இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி மற்றும் இளைஞன் ஒருவர் கல்கிஸை – அல்விஸ் பிளேஸில் உள்ள “ப்ளூ ஓஷன் தொடர்மாடியில் தங்கியிருந்த நிலையில் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

இந்த யுவதி நாளை மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவருடன் பேஸ்புக் ஊடாக உறவை பேணிய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சட்டக்கல்லூரி மாணவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பதில் நீதவான் திருமதி ரத்னா கமகே நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....