யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு

Date:

நீர்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தனிப்பட்ட பகை காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....