ஆசிய கோப்பை 2023: மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தம்

Date:

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் – சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். வேகப்பந்து வீச்சாளர்களை சுலபமாக எதிர் கொண்ட இருவரும் சுழற்பந்து வீச்சில் திணற ஆரம்பித்தனர்.

சுப்மன் கில் 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 3 ரன்னிலும் அரை சதம் விளாசிய ரோகித் சர்மா 53 ரன்னிலும் வெல்லாலகே ஓவரில் ஆட்டமிழந்தனர். 80 ரன்களில் விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்திய அணி 91 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து இஷான் கிஷன் – கேஎல் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

44 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த கே.எல். ராகுல் வெல்லாலகே ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வெல்லாலகே அவர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றினார்.

அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஜஸ்பிரித் பும்ரா 5 ரன்களையும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 47 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்த நிலையில், 197 ரன்களை எடுத்துள்ள நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

இந்தியா சார்பில் அக்சர் பட்டேல் 15 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை சார்பில் வெல்லாலகே ஐந்து விக்கெட்களை கைப்பற்றினார். இவர் தவிர சரித் அசலங்கா நான்கு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....