1036 போட்டிகளுக்கு பின் சுழலில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இந்தியா அணி

Date:

ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் – சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். வேகப்பந்து வீச்சாளர்களை சுலபமாக எதிர் கொண்ட இருவரும் சுழற்பந்து வீச்சில் திணற ஆரம்பித்தனர். சுப்மன் கில் 19 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 3 ஓட்டங்களிலும் அரை சதம் விளாசிய ரோகித் சர்மா 53 ஓட்டங்களிலும் வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

80 ஓட்டங்களில் விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்திய அணி 91 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து இஷான் கிஷன் – கேஎல் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. 44 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்த கே.எல். ராகுல் வெல்லாலகே பந்துவீச்சில் அவரிடமே பிடிக் கொடுத்து வெளியேறினார். முதல் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வெல்லாலகே அவர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜஸ்பிரித் பும்ரா 5 ஓட்டங்களையும், குல்தீப் யாதவ் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 47 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்த நிலையில், 197 ஓட்டங்களை எடுத்துள்ள நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

மீண்டும் சிறிது இடைவேளையின் பின்னர் ஆரம்பான போட்டியில் 49.1 ஓவரில் இந்தியா தனது கடைசி விக்கெட்டினையும் பறிக்கொடுத்து 213 ஓட்டங்களுக்கு இலங்கையிடம் மடங்கியது. இலங்கை சார்பில் வெல்லாலகே ஐந்து விக்கெட்களை கைப்பற்றினார். இவர் தவிர சரித் அசலங்கா நான்கு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இந்தியா அணி 1036 போட்டிகளுக்கு பின்னர் தனது அணியின் சகல விக்கெட்டுக்களையும் சுழல் பந்துவீச்சில் பறிக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அணி தொடர்ந்து 14 ஆவது ஒரு நாள் போட்டியில் தனது எதிர் அணியின் சகல விக்கெட்டுக்களையும் பெற்றுள்ளமை விஷேட விடயமாக அமைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....