34, 600க்கு விற்பனையான கிம்புலா பணிஸ்

Date:

தம்புள்ளை பிரதேசத்தில் கிம்புலா பனிஸ் ஒன்று 34,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொஹொரன்வெவ பகுதியில் மூன்று நாட்களாக தம்புள்ளை ‘ஜவய இளைஞர்கள் அமைப்பு’ நடத்திய தொடர் நாடக நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்கள் கண்காட்சி ஏலத்தின்போது கிம்புலா பணிஸ் ஒன்று 34600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஏலத்திற்காகவே, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று குறித்த கிம்புலா பணிஸை பிரத்தியேகமாக தயாரித்து வழங்கியுள்ளனர்.

அதன்படி, இந்த நாடகக் காட்சியைக் காண வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் குழுவிற்கும் ஜேர்மன் பிரஜைகள் குழுவிற்கும் இடையில் சில மணிநேர ஏலம் நடைபெற்றது. பிறகு, ஜேர்மன் பிரஜைகள் இந்த கிம்புலா பணிஸை வாங்கியுள்ளனர்.

சமிந்த குமார கல்கமுவ என்பவரே கிம்புலா பணிஸை 34,600 ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்தார்.

இதற்கு முன்னர் கலேபிந்துனுவெவ பகுதியில் இவ்வாறான ஓர் ஏல விற்பனையில் ஒரு கிம்புலா பனிஸ் 22,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....