63 வயதிற்குப் பின்னர் ஓய்வுபெற்ற விசேட வைத்தியர்கள் உட்பட கிட்டத்தட்ட 500 வைத்தியர்கள் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் மீள் பணியமர்த்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதனால், கிட்டத்தட்ட ஐம்பது வைத்தியர்கள் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதாக அவர் குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற வைத்தியர்களுக்கு மீள் நியமனம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், வைத்தியர் பற்றாக்குறைக்கு இது ஒன்றே தீர்வு எனவும் தெரிவித்தார்.
இதேவேளை வெளிநாட்டு பயிற்சிக்காக சென்ற சுமார் 600 வைத்தியர்கள் நாடு திரும்புவார்கள் என நம்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சிறப்பு வைத்தியர்கள் உள்ளிட்ட ஏராளமான வைத்தியர்கள் வெளிநாடுகளில் பணிபுரியச் சென்றதால் இந்தப் பணியிடங்கள் காலியாகின.
வைத்தியர்கள் பற்றாக்குறையால், நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் வைத்திய செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.