8 பேருடன் பயணித்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.
விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் லியர்ஜெட் 45 விமானம் பயணித்துள்ளது. குறித்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இந்த சம்பவம் நடந்தது.காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு பணியாளர்களும் இருந்தனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற விமான ஓடுபாதை பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன