டெலிவரி போயாக இருந்த இளைஞர் நெதர்லாந்து கிரிகெட் அணியில்

Date:

சென்னையை சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க நெதர்லாந்து கிரிக்கெட் அணியுடன் இணைந்துள்ளார்.

 

வலைப் பயிற்சியில் ஈடுபட தங்களுக்கு சில பந்துவீச்சாளர்கள் தேவை என சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்து அணி விளம்பரம் செய்தது.

இதற்காக பலரும் தமது பந்துவீச்சு வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளனர். அதில் சென்னையை சேர்ந்த லோகேஷ் குமார் என்ற இளைஞரும் ஒருவர். அவர் தமிழக அளவில் ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர். அவர் தனது சைனாமேன் ஸ்பின் பந்துவீச்சை வீடியோவாக பதிவுசெய்து அனுப்பியிருக்கிறார்.

 

 

இந்திய அணியில் அதிக சைனாமேன் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதால் லோகேஷ் குமார் எளிதாக நெதர்லாந்து அணியில் ஈர்க்கப்பட்டுள்ளார். அதை அடுத்து அவருக்கு நெதர்லாந்து அணியின் பயிற்சியில் பந்து வீச வாய்ப்பு கிடைத்துள்ளது. நெட் பவுலராக அவர்களுடன் அடுத்த இரண்டு மாதங்கள் அவர் பயணம் செய்ய இருக்கிறார்.

 

தமிழக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும், வருமானத்திற்கு ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார் லோகேஷ். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே வேலையில் இருந்து கொண்டே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்திருக்கிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....