வவுனியா இரட்டை கொலை – மூவருக்கு பிடியாணை

Date:

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.

 

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

 

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

 

அத்துடன், எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த யுவதி, தான் ஒருவரை கண்டதாகவும் அவரை அடையாளம் காட்ட முடியும் எனவும் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.

 

அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்புக்கு திகதியிடப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த யுவதி வியாழக்கிழமை (21) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை அடையாளம் காட்டியுள்ளார்.

 

மேலும், மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

 

குறித்த மூவரும் தலைமறைவாகவுள்ளதால் அவர்களை கைது செய்ய பகிரங்க பிடியாணை உத்தரவு வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....