சிங்கப்பூரில் கடவுச்சீட்டு அல்லாத தானியங்கி குடிபெயர்வு அனுமதி

Date:

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் அடுத்த வருடம் முதல், கடவுச்சீட்டு அல்லாத தானியங்கி குடிபெயர்வு அனுமதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

இது முகத்தை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளை மட்டுமே பயன்படுத்தி, கடவுச்சீட்டு அல்லாமல் உள்ளுர் விமான பயணங்களுக்காக பயணிகளை அனுமதிக்கவுள்ளது.

 

அதன்படி, கடவுச்சீட்டு இல்லாத குடிப்பெயர்வு அனுமதியை அறிமுகப்படுத்தும் உலகின் முதல் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகுமென அந்த நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் ஜோசபின் தியோ அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

 

இதற்காக நாட்டின் குடிவரவு சட்டத்தில் பல திருத்தங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், சிங்கப்பூருக்கு வெளியே பல நாடுகளுக்கு செல்வதற்கு கடவுச்சீட்டு தேவைப்படும் எனவும் கடவுச்சீட்டு இலவச அனுமதி வழங்கபடவில்லை எனவும் அமைச்சர் ஜோசபின் தியோ குறிப்பிட்டுள்ளார்.

 

உலகின் சிறந்த விமான நிலையம் மற்றும் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகளில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையமும் ஒன்றாகும். இந்த விமான நிலையம் ஊடாக 100 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையம், டோக்கியோ நரிடா, டோக்கியோ ஹனேடா, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி, லண்டன் ஹீத்ரோ மற்றும் பாரிஸ் சார்லஸ் டி கோல் போன்ற விமான நிலையங்களில் ஏற்கனவே ஓரளவு பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....