மீனவர் சடலமாக மீட்பு !

Date:

நிகவெரட்டிய, ஹுலுகல்ல நீர்த்தேக்கத்தில் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆற்றுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிகவெரட்டிய, ஹுலுகல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் (20) இரவு குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடிப்பதற்காக படகில் தனியாக சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், நேற்று (21) குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர், குறித்த நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதையும், அந்த சடலத்திற்கு அருகில் மீன்பிடி படகு ஒன்று இருப்பதையும் அவதானித்து அதுபற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....