மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோட்டார் சைக்கிளுடன் மோதி உயிரிழப்பு !

Date:

திருகோணமலை -சேறுவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சேருவில – காவன் திஸ்ஸபுர பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது முன்னாள் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் அவருடன் சென்ற சக நண்பரை வீட்டுக்கு முன் இறக்குவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த சக நண்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்விபத்தில் அதே பகுதியில் வசித்து வந்த குலங்கமுவே கெதர குலரத்ண (56வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சேறுவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச். குணரத்ன சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

 

இதேவேளை காயமடைந்த மற்றுமொருவர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேறுவில பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....