நிஷான்[ Nissan ] கார் நிறுவனத்தின் புதிய தீர்மானம்

Date:

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிஷான், மின்சார கார் உற்பத்தியை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளது.

ஐரோப்பாவில் விற்கப்படும் அனைத்து நிஷான் கார்களையும் 2030 ஆம் ஆண்டிற்குள் பிரத்தியேகமாக மின்சார கார்களாக மாற்ற நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

இதேவேளை, 2030 ஆம் ஆண்டுக்கு பின்னர் டீசல் மற்றும் பெற்றோல் கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் பிரித்தானியாவின் தீர்மானம் 2035 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் இங்கிலாந்தின் முடிவை கருத்தில் கொள்ளாமல் நிஷான் நிறுவனம் தனது முடிவை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், நிஷான் நிறுவனத்தின் தலைவர் தமது முடிவு சரியானது என்று கூறியுள்ளார்.

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நிஷான் திட்டமிட்டுள்ளது.

இதனால் மின்சார கார்களின் விலை குறையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....