பீடி உற்பத்தியாளரை தாக்கிய மதுவரி அதிகாரிகள்

Date:

பீடி உற்பத்தியாளர் ஒருவரை தாக்கி இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்ய மதுவரி ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து கண்டறிந்து, தரம் பாராமல் சட்டத்தை அமுல்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

வலஸ்முல்லையில் உள்ளபீடி உற்பத்தியாளரின் உரிமம் கடந்த ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், இதன் காரணமாக கடந்த 18ஆம் திகதி தங்காலை மதுவரி பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று உற்பத்தியாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தீர்வு காணும் வகையில் பீடி உற்பத்தியாளரிடம் 14 இலட்சம் ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த நபரை முச்சக்கர வண்டியில்  கடத்திச் சென்று தாக்கி 10 இலட்சம் ரூபா பணத்தினை பலவந்தமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வௌியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக பீடி உற்பத்தியாளர் வலஸ்முல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இதில் தொடர்புடைய 05 சந்தேக நபர்களை நேற்று (25) கைது செய்தனர்.

தங்காலை மதுவரி பிரிவின் பொறுப்பதிகாரி, இரண்டு மதுவரி கட்டுப்பாட்டாளர்கள், மதுவரி கட்டுப்பாட்டாளர் பிரிவின் சாரதி மற்றும் இராணுவ சார்ஜன்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....