மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

Date:

வாழைச்சேனையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 1 அல் முக்தார் வீதியில் இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

கணவன், மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை குளியலறையில் வைத்து கணவன் கத்தியால் கழுத்தையும், கையையும் வெட்டியபோது, பலத்த காயங்களுக்குள்ளான பெண் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள கூக்குரலிட்ட போது அயலவர்கள் சென்று பெண்ணை காப்பாற்றி மீட்டுள்ளனர்.

57 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியைசாலையில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய கணவன் வாழைச்சேனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....