உயிர் பலி – வாகனத்தை செலுத்தியவருக்கு விளக்கமறியல்

Date:

கொழும்பு குருந்துவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு இலக்கம் 7 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருந்துவத்தை இலவச சுற்றுவட்டத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு தற்போது பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவராவார்.

விபத்து தொடர்பில் காரை செலுத்தி தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....