கமல்ஹாசனின் 237-வது படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

Date:

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் சமீபத்தில் இந்தியன்-2 படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனை தொடர்ந்து தனது 234-வது படமான ‘தக் லைப்’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து கமலின் 235-வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தும், 236-வது படத்தை இயக்குனர் நெல்சனும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போதுவரை வெளியாகவில்லை.

கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளதாகவும், ஆக்சன் படமாக உருவாக உள்ளதாகவும் அன்பறிவ் சகோதரர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள சில தகவலின்படி, அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ் தற்போது கமலின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ‘அமரன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அப்படத்தின் இசைக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கமல்ஹாசன் தனது அடுத்த படத்தை ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக பயன்படுத்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....