ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்

Date:

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புத்த பெருமானின் வாழ்க்கையுடன் தொடர்புள்ள மிகப் புனிதமான நான்கு இடங்களில் ஒன்றாக புத்தகயா காணப்படுவதோடு 2002 ஆம் ஆண்டு புத்தகயா மகாவிகாரை உலக மரபுரிமையாக யுனொஸ்கோவினால் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்திய மகாபோதி சங்கத்தின் பொதுச் செயலாளர் வண. பெலவத்தே சீவலி தேரர் மற்றும் சாரநாத் மையத்தின் விகாராதிபதி வண. ரத்மல்வல சுமித்தானந்த தேரர் ஆகியோர் இதன்போது ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....