பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முன்னெடுப்பில், ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் நேற்று (ஜூலை 15) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அங்குள்ள அதிகாரிகளிடையே வரவேற்பைப் பெற்றது.
முன்னதாக, இந்த அழகு நிலையம் பொலிஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே சலுகை விலையில் சேவையளித்து வந்தது. இப்போது, பெண் பொலிஸ் அதிகாரிகள் மட்டுமன்றி, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களும் சலுகை விலையில் அழகு சேவைகளை பெற முடியும்.
இந்த நிலையத்தில், பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பெண்கள் பணிபுரியும் வாய்ப்பு பெறுவதும் இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்த முயற்சி, பதில் தலைவர் நில்மினி சமரதுங்க, உறுப்பினர் சந்தீபா செவ்மினி மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் சிறப்பாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





