
ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தையில் உள்ள வீட்டொன்றின் அருகே அடையாளம் தெரியாத நபரின் சடலம் இன்று (17) காலை ஹோமாகம பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சம்பவம் குறித்து ஹோமாகம பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.






