பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஈடுபாடு தொடர்பான மனு: செப்டம்பர் 1 அன்று உத்தரவு !

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ளக நடவடிக்கைகளில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அகற்ற உத்தரவிடக் கோரி, பாதாள உலகக்குழு தலைவர் மிதிகம ருவன் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மனுதாரர் சார்பில், சிறைச்சாலையின் உள் விவகாரங்களில் பொலிஸ் அதிரடிப்படையை பயன்படுத்துவது சட்டத்திற்கு எதிரானது என வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, இது சட்டத்துக்குள் வரும் செயல் எனவும், குற்றங்களை தடுக்கும் நோக்கில் தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கம் வழங்கியது.

நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பதற்கான தீர்ப்பை செப்டம்பர் 1 அன்று வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இரு தரப்பும் ஓகஸ்ட் 25 இற்குள் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும்.