
ஹெவ்லொக் சிட்டியில் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விசாகா ஐராங்கனி வீரகோன் என்ற பெண் சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நீதிபதி மஞ்சுள திரகரத்ன இவ்வுத்தரவை வழங்கினார். சந்தேகநபர் ரூ. 250,000 ரொக்கப் பிணையும், ரூ. 2.5 மில்லியன் பெறுமதியுள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்படுகிறார்.
இதற்கு முன்னர், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.





