ரூ.75 இலட்சம் மோசடி: ரொஹான் பிரேமரத்ன வீடு தொடர்பான தகவலுக்கு மறுப்பு!

Date:

75 இலட்சம் ரூபா நிதி மோசடியில் சிக்கியதாக குற்றச்சாட்டு நிலவியுள்ள ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் வீட்டிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இதுவரை வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஊடகங்களில் வெளியான, அவரது வீடு சோதனையிற்குள்ளாகியுள்ளது என்ற செய்திகளை அவர் மறுத்து, தானே வீட்டிலேயே இருப்பதாக விளக்கம் வழங்கினார்.

இந்த வழக்கு, 2021இல் தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் உள்ளிட்ட குழுவொன்றுடன் தொடர்புடையதாகும். குறித்த குழுவினர் சம்பாதித்ததாகக் கூறப்படும் ரூ.75 இலட்சம் பணம், களனி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்நேரத்தில் ரொஹான் பிரேமரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....