Home இலங்கை பொது சொத்துச் சட்டம் மீறல்: மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட மூவர் மீது குற்றப்பத்திரிகை!

பொது சொத்துச் சட்டம் மீறல்: மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட மூவர் மீது குற்றப்பத்திரிகை!

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகள் கொள்வனவு செய்யப்பட்டு, அரசியல் ஆதாயத்திற்காக விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சதொச முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ, மற்றும் அமைச்சின் முன்னாள் செயலாளர் நந்த மல்லவாராச்சி ஆகியோருக்கு, இன்று (ஜூலை 21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மூவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், அடுத்த நீதிமன்ற தினத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தார்.