
இன்று அதிகாலை (22 ஆம் தேதி) 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயதான கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் 181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹஷீஷ் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் சுங்க அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைதான பெண்ணும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை, சுங்க ஊடகப் பேச்சாளர் மற்றும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகர் சீவலி அருகோட உறுதி செய்துள்ளார்.






