டாக்கா, பங்களாதேஷ் – நேற்று (21 ஆம் தேதி) மதியம் 1 மணியளவில், பங்களாதேஷ் விமானப் படைக்கு சொந்தமான F-7 BGI வகை போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, டாக்கா நகரைச் சேர்ந்த உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிந்தது.

இந்த போர்விமான விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என பங்களாதேஷ் தீயணைப்பு துறையின் இயக்குனர் ஜெனரல் சாகீத் கமால் உறுதிபடுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களும் ஆசிரியர்களுமாக இருக்கின்றனர்.

மேலும், 170 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை இயக்கிய பைலட் முகமது தவ்கீர் இஸ்லாம், தற்போது இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக பதிலளித்து தீயை கட்டுப்படுத்தினர்.

இதற்கு முன்னர், கடந்த மாதம் அகமதாபாத் இலிருந்து இலண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து 260 பேர் உயிரிழந்ததாகும் சம்பவமும் குறிப்பிடத்தக்கது.