யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர், கனடாவில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் வந்திருந்த நிலையில், ஜூலை 24ஆம் தேதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கனடாவில் வசிக்கின்றனர்.
இவர் யாழில் தங்கியிருந்தபோது மச்சான் அவரது வீட்டுக்குச் சென்று சடலமாக இருப்பதை பார்த்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திருப்பதுடன், மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு வருகின்றார்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.