
யாழ்ப்பாணம் வேலணை – துறையூர் பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 19ஆம் தேதி, சிறுமி ஜூஸ் வாங்க கடைக்கு சென்றபோது, கடை உரிமையாளர் ஜூஸ் குளிரூட்டிக்குள் செல்லும்படி கூறி, பின்னர் கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இது குறித்து தாயாரிடம் தெரிவித்ததாலும், சமூகத்துக்கு அஞ்சிய தாயார் ஆரம்பத்தில் முறைப்பாடு செய்ய தயங்கினார்.
சமூக நலன்விரும்பிகளின் உதவியால், ஜூலை 23 அன்று கிராம உத்தியோகத்தருக்கு தகவல் அளிக்கப்பட்டு, 24ஆம் தேதி, சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊர்காவற்றுறை பொலிஸாரும் முறைப்பாட்டைப் பெற்று ஜூலை 25 பிற்பகல் சந்தேக நபரை கைது செய்தனர்.
இவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






