டுபாயிலிருந்து இலங்கையில் செயல்படும் ‘பஸ் லலியா’ எனப்படும் லலித் கன்னங்கர தலைமையிலான குற்றவியல் வலையமைப்புடன் தொடர்புடைய நால்வர், 7.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்காவல் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹங்வெல்ல மோட்டார் சைக்கிள் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் நுவன் திலகரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வீதி தடைகளை தவிர்த்து தப்ப முயன்றபோது சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடருகின்றன.