பொரளை மயான சந்தியில் இன்று (ஜூலை 28) காலை ஏற்பட்ட கடுமையான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். கிரேன் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் மீது மோதியது. உயிரிழந்தவர் அதுருகிரியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

காயமடைந்த 7 பேரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டுவரும் போதே பரிதாபமாக உயிரிழந்தார் என வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

விபத்துக்குப் பொறுப்பான கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரேக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.