Home இலங்கை ஊவா மாகாண பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!

ஊவா மாகாண பிரதம செயலாளராக பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக இன்று (ஜூலை 28) நியமித்தார்.

நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களால் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான பெர்னாண்டோ, இதற்கு முன் மேல் மாகாணத்தின் பல துறைச்செயலாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.