முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது, சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு குற்றச்சாட்டுக்கமைவாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை, செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (ஜூலை 28) உத்தரவிட்டுள்ளது.

2010–2012 காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது, சட்டபூர்வ வருமானத்திற்கு அதிகமாக ரூ.150 மில்லியனைத் தாண்டும் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கு, நீதிபதி சஹன் மாபா பண்டார முன்னிலையில் இன்று முன் வைக்கப்பட்டது.