
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த யோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதிக் காப்பீடு தொகையை குறைக்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னதாக, 2023 மே 15 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வருடத்திற்கு ரூ.1,000,000 (10 இலட்சம்) வரையிலான தொகைக்கான கூட்டுக் காப்புறுதி வழங்கும் திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த காலப்பகுதியில் அந்தக் காப்புறுதிக் காப்பீடு நடைமுறையில் இருந்தது.
எனினும், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அந்த தொகையை ரூ.250,000 (2.5 இலட்சம்) ஆகக் குறைப்பதனை முன்மொழிந்தார்.
இதனை அடுத்து, வரும் 2025 அக்டோபர் 19 முதல் ஆரம்பிக்கவுள்ள புதிய காப்புறுதி ஆண்டில் இருந்து, புதிய வரம்பு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, ஒரு உறுப்பினருக்கு வருடத்திற்கு ரூ.2.5 லட்சம் மட்டுமே காப்புறுதிக்குப் பெறக்கூடியது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையை அமைச்சரவை தற்போது அங்கீகரித்துள்ளது.






