
சீதுவ, ஈரியகஹலிந்த வீதியில் குழுவிவொன்றின் தாக்குதலால் 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட அவர், பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






