ருமேனியா வேலைவாய்ப்பு மோசடி – முகாமையாளர் கைது!

ருமேனியாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பண்டாரவளை இளைஞரிடமிருந்து ரூ.945,000 மோசடி செய்த குற்றச்சாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டவில் உள்ள நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் 2023 முதல் பலமுறை இளைஞரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் கணினிப் பிரிவில் பணியாற்றியவராகும். சந்தேக நபர் இன்று (13) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.