பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிகளுக்குள் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக, பெல் 212 ரக ஹெலிகொப்டரின் தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெரிவித்தார்.
இந்த விபத்தில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு தெஹியத்தகண்டிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை விமானி சாட்சியளிக்கையில், விபத்துக்கு தனது தவறு காரணமல்ல என்றும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கை ஆகஸ்ட் 21ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், உயிரிழந்த 6 பேரின் மரணத்திற்கான காரணம் அதே நாளில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முன்னேற்ற அறிக்கையையும் சமர்ப்பிக்க பொலிஸாருக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.






