

தகுதியற்ற மருந்து கலவை நிபுணர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்ததாவது, காலை 8 மணி முதல் வேலைநிறுத்தம் ஆரம்பமாகும் என தெரிவித்தார். தேவையற்ற நியமனத்தை இருமுறை அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.





