ஐ அம் கேம் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் . ஆர்டிஎக்ஸ் படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காந்தா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது துல்கர் சல்மான், ‘ஐ அம் கேம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவரது திரைப்பயணத்தில் 40வது படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.
மீசைய முறுக்கு 2 படத்தின் அதிரடி அறிவிப்பு
சூதாட்டத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில், தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு அமைத்துள்ளனர்.
சுமார் 11 மாதங்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.
முதலில் கோடை வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துல்கர் சல்மான் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.




