X கணக்கு முடக்கும் முயற்சிக்கு தடை

Date:

அரசியல் பதிவுகளை வெளியிடும் 18 X கணக்கு பக்கங்களை 3 மணி நேரத்திற்குள் முடக்க எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் பொலிஸார் நோட்டீஸ் அனுப்பினர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான தவெக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்சிப் பொறுப்பேற்றது. இன்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அரசியல் பதிவுகளை வெளியிடும் 18 X கணக்கு பக்கங்களை 3 மணி நேரத்திற்குள் முடக்க எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழநாடு சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

அவ்வாறு முடக்கவில்லை என்றால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவைடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இந்த எக்ஸ் பக்கங்களில் சில பிரபல அரசியல் விமர்சகர்கள் பக்கங்களும் அடக்கம்.

இது அரசுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்கும் சர்வாதிகார செயல் என அவர்கள் தரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்தன.

குஜராத் அணி முதலில் துடுப்பாட்டம்

இந்நிலையில் இதை எதிரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் எக்ஸ் கணக்குகளை முடக்க, எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ அம் கேம் ஆகஸ்டில் வெளியாகும்..!

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....