14 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய பணிப்பெண்!

Date:

சிலாபம் பகுதியில் ஓய்பெற்ற பொறியியலாளரின் வீட்டிலிருந்து சுமார் 14 இலட்சம் தங்க நகைகளை திருடிய இருவரை சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப்புலானாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டில் பணிப்புரிந்து வந்த பெண்ணொருவரும், நகைகளை திருடி விற்பனை செய்ய உதவி புரிந்த நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் சிலாபம்-லங்சியாவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

75 வயதான ஓய்வு பெற்ற பொறியாளர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும், சில மாதங்களுக்கு முன்பிருந்து அந்த வீட்டில் குறித்த பணிப்பெண் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

வீட்டில் பணிபுரியும் போது, ​​தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை அவதானித்துள்ள சந்தேகநபர், இரண்டு தடவைகளில் 14 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடியது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, பிரதான சந்தேகநபரான பணிப்பெண் மற்றும் அவருக்கு உதவிய நபரையும் எதிர்வரும் 17ஆம் திகதி சிலாபம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....