பழம்பெரும் “ஜோன் விக்” நடிகர் லான்ஸ் ரெட்டிக் காலமானார்!

Date:

பிரபல தொலைக்காட்சி நாடகமான “தி வயர்” மற்றும் “ஜோன் விக்” என்ற அதிரடி திரைப்படத் தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் லான்ஸ் ரெட்டிக் காலமானார்.

காலமாகும் போது அவருக்கு வயது 60 என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரெட்டிக்கின் மரணம் குறித்து சக நடிகை மியா ஹேன்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெட்டிக் நேற்று (17) இயற்கை எய்தியதாக தெரிவித்துள்ளார்.

அவரது மரணம் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ள TMZ இணையத்தளம், லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோ சிட்டி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ரெடிக் தனது இறுதி மூச்சை விட்டதாகத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், “ஜோன் விக்” அதிரடி திரைப்படத் தொடரின் நான்காவது பாகம் எதிர்வரும் மார்ச் 24 திகதி வெளிவரவுள்ள தருணத்தில், சில நாட்களுக்கு முன்னதாகவே நடிகரின் மரணம் நிகழ்ந்தமை கலையுலகில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில்...

பாகிஸ்தானில் ரயில் விபத்து !

பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதியதில் நேற்று (24)...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம்...

இந்தியாவின் ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே...