பாடசாலை மீது தீவிரவாத தாக்குதல் – மாணவர்கள் உட்பட 40 பேர் பலி!

Date:

மேற்கு உகாண்டாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கோ எல்லைக்கு அருகே உள்ள பாடசாலைக்குள் இரவு நேரத்தில் புகுந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழு இந்தத் தாக்குதலை நடத்தியது.

அந்த பாடசாலையில் சுமார் 60 மாணவர்கள் தங்கி இருந்ததாகவும், மாணவிகள் உட்பட சிலர் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலின் பின்னர் கிளர்ச்சியாளர்களால் பாடசாலை கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....