ஹிக்கடுவ துப்பாக்கி சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காயம்!

Date:

ஹிக்கடுவ – சீனிகம விகாரைக்கு அருகில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்து, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் உந்துருளியில் சென்ற இருவர் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் தமது மகிழுந்திலேயே ஹிக்கடுவ காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவர் காவல்துறையினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ரத்கம பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....